கிண்ணியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை,கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டையாறு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா-கட்டையாறு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கந்தளாய் - சூரியபுர விஷேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சோதனையிட்டபோது 68 பெக்கட்டுக்கள் 3 கிராம் 760 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.