மட்டக்களப்பில் நள்ளிரவில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞனுக்கு விளக்கமறியல்!

Report Print Gokulan Gokulan in சமூகம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள இருதயபுரம் பகுதியில் நள்ளிரவில் வாளுடன் சுற்றித்திரிந்த 17 வயதுடைய இளைஞரொருவரை எதிர்வரும் 25 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.ஏ. றிஸவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இளைஞரொருவர் வாளுடன் சுற்றி திரிவதாக பொலிஸ் அவசர பிரிவு 119 இலக்கத்துக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் குறித்த பிரதேசத்தினை சுற்றிவளைத்து சோதனையில் ஈடுபட்ட போதே வாளுடன் 17 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.