சுருக்கு வலை பயன்படுத்துவதை தடை செய்யக்கோரி களுதாவளை மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Report Print Rusath in சமூகம்
45Shares

மட்டக்களப்பு - களுதாவளை, தேத்தாத்தீவு, களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம் உள்ளிட்ட கடற் பிராந்தியங்களில் சட்டவிரோதமான முறையில் சுருக்கு வலை பயன்படுத்துவதை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் களுதாவளைப் பகுதி மீனவர்களால் களுதாவளை கடற்கரையில் வைத்து இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிடுகையில்,

தாம் பரம்பரை பரம்பரையாக இதுவரைகாலமும் இந்த கடலை நம்பி வாழ்ந்து வருகின்றோம். இவ்வருட ஆரம்பத்திலிருந்து இன்று வரை கடலில் இருந்து எமக்கு எதுவித மீன்களும் பிடிபடிவில்லை.

சட்டவிரோதமான முறையில் சிலரால் சுருக்குவலை பயன்படுத்தப்படுவதே இதற்குக் காரணமாகும்.

எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திலெடுத்து தடை செய்யப்பட்ட சுருக்குவலைப் பயன்பாட்டை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு சுருக்குவலை பயன்படுத்தி கடலில் மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக சட்டநடிவடிக்கையும் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.