வாகனமொன்றை முந்திச்செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவர் விபத்தில் பலி!

Report Print Thirumal Thirumal in சமூகம்

நுவரெலியா – தலவாக்கலை வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

நோர்வூட் கீழ்பிரிவைச் சேர்ந்த செல்வராஜா பிரேம் சதீஸ் (வயது -24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்களும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

முன்னே சென்ற வாகனமொன்றை முந்திக்கொண்டு செல்வதற்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் முற்பட்ட வேளையிலேயே எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்,நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.