சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபைத் தலைவர் உட்பட 8 பேர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

பணத்தை பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் லக்கலை பிரதேச சபையின் தலைவர் உட்பட 8 பேர் லக்கலை அத்தொட்டஹமுன லேல் ஓய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று அதிகாலை 2.30 அளவில் கைது செய்யப்பட்டதாக லக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடம் இருந்து 24 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்பட்ட பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதேச சபையின் தலைவர் உட்பட கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவரிடம் இருந்து 221 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இந்த நபர் லக்கலை வில்கமுவ பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் “யகா” என்ற புனைப் பெயரில் அழைக்கப்படும் நபர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்டவர்களுக்கு பொலிஸார் பிணை வழங்க முடியும் எனவும் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் லக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.