யாழ்.பருத்தித்துறையில் கத்தியால் குத்தப்பட்டு ஒருவர் படுகொலை

Report Print Tamilini in சமூகம்

கத்திக் குத்துக்கு இலக்காகிய ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று மந்திகை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

பருத்தித்துறை வியாபாரி மூலையில் இன்று மதியம் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

அதே இடத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் நடேசலிங்கம் (வயது -49) என்பவரே இவ்வாறு இன்று மாலை கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சந்தேக நபர் என பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என கூறப்பட்டபோதிலும், குற்றவாளியே பொலிஸ் நிலையத்தில் தானாகவே முன்வந்து சரண்டைந்ததாகவும், அவர் ஒரு மனநோயாளி எனவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

எந்தவிதமான முன் பகையும் இதற்கான காரணம் இல்லை எனவும் தெரியவந்துள்ளது. குத்துக்குள்ளானவரை அம்புயூலன்ஸ் வண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றும் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.