மன்னாரில் அமைக்கப்பட்ட ஆற்றுகைப்படுத்தல் நிலையம் இராஜாங்க அமைச்சரால் திறந்து வைப்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார் -அடம்பன் பகுதியில் அமைக்கப்பட்ட ஆற்றுகைப்படுத்தல் நிலையம் இன்றைய தினம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த பிரதம விருந்தினராக கலந்து கொண்டு 6 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிட தொகுதியை திறந்து வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழு தலைவருமான காதர் மஸ்தான் மற்றும் மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர்கள், வீடமைப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர், உத்தியோகஸ்தர்கள் மற்றும் மன்னார் தேசிய வீடமைப்பு அதிகாரசபை பணிபாளர், திட்டமிடல் பணிப்பாளர், மாந்தை மேற்கு பிரதேச செயலக ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

போதைப் பொருள் பாவனை காரணமாக மனதளவில் பாதிக்கப்படவர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் முகமாகவும் அவர்களுக்கான ஆலோசனைகள் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கும் வகையில் குறித்த கட்டிட தொகுதி அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.