பொது மக்களுக்கு எச்சரிக்கை! பொது சுகாதார அதிகாரிகள் என்ற பெயரில் மோசடி

Report Print Ajith Ajith in சமூகம்

பொது சுகாதார அதிகாரிகள் (பிஎச்ஐ) என்று கூறி ஆள்மாறாட்டம் செய்பவர்களின் குழு ஒன்று கஹதுடுவ பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையம் அமைந்துள்ள பிரதேசத்தில் வசிக்கும் மக்களிடம் பணமோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசீஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கூறி இந்த போலி சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களின் நெருங்கியவர்களிடம் இருந்து தலா 2000 ரூபாவை சேகரித்துள்ளனர்.

சிலரிடம் 6000 ரூபாவும் சேகரிக்கப்பட்டுள்ளது. எனினும் பிசீஆர் பரிசோதனைக்கு வருவதாக கூறி சென்ற அவர்கள் சேகரித்து பணத்துடன் திரும்பி வரவில்லை என்று பணம் செலுத்தியவர்கள் முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்

பல்வேறு பகுதிகளில் செயல்படும் இதுபோன்ற போலி பொது சுகாதார அதிகாரிகள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பொதுசுகாதார அதிகாரிகளை கோடிட்டு பணம் சேகரிப்போர் தொடர்பில் பொதுமக்கள் 0112635675 மூலம் முறையிடமுடியும் என்று உபுல் ரோஹன அறிவித்துள்ளார்.