கோடிக்கணக்கான பணத்திற்கு இலங்கையர்களை ஐரோப்பிய நாடொன்றுக்கு அனுப்பிய ஸ்ரீலங்கன் சேவை ஊழியர்கள்!

Report Print Vethu Vethu in சமூகம்

ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு இலங்கையர்களை சூட்சுமமான முறையில் அனுப்பும் ஸ்ரீலங்கா விமான சேவையின் ஊழியர்கள் சிக்கியுள்ளனர்.

போலி ஆவணங்களை தயாரித்து அனுப்பும் பாரிய மோசடி நடவடிக்கை மேற்கொண்ட குழுவினர் கோடி கணக்கில் பணத்தினை பெற்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட குற்ற விசாரணை திணைக்களம் அந்த குழு மற்றும் அதன் முக்கியஸ்தரை கைது செய்துள்ளது.

கடந்த ஜுலை மாதம் 27ஆம் திகதி இவ்வாறு போலி ஆவணங்களில் இத்தாலி செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த வருண குணதிலக்க என்ற நபர் கைது செய்யப்பட்டமை ஊடாக இந்த கும்பல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

விமான பயணத்துக்கான போலி ஆவணங்கள் தயாரிக்கும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்கள் சிலரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கும்பலுக்கு பிணை வழங்க மறுத்த நீர்கொழும்பு பிரதான நீதவான் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதார்.

இந்த மோசடி நடவடிக்கை நீண்ட நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.