திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக கந்தளாய், சூரியபுர விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு - வாகரை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய எஸ்.ஐனோத் என தெரியவருகிறது.

மட்டக்களப்பு - வாகரை பகுதியில் இருந்து புல்மோட்டை பிரதேசத்திற்கு ஐஸ் போதைப்பொருளை கொண்டு செல்லும் போது பேருந்து தரிப்பிடத்தில் வைத்து 2 கிராம் 230 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் சந்தேகநபரை திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக சூரியபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.