பிள்ளையானுக்கு பிணை வழங்கப்படலாம்

Report Print Steephen Steephen in சமூகம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு விரைவில் பிணை வழங்கப்படலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான கைது செய்யப்பட்ட சந்திரகாந்தன் சுமார் 5 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிணையில் வெளிவர முடியாத பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பிள்ளையான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை ஆதரித்து வருகிறார்.

சந்திரகாந்தன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அன்றைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவுடன் கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.