தற்கொலை செய்ய முயற்சித்த இளைஞனை காப்பாற்றிய பொலிஸார்

Report Print Steephen Steephen in சமூகம்

நீர்வீழ்ச்சி ஒன்றில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த 23 வயதான இளைஞனின் உயிரை ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.

ஹட்டன் எபோஸ்லி தோட்டத்தில் இருந்து மகாவலி கங்கையின் பிரதான கிளை ஆறுக்கு தண்ணீர் செல்லும் அருவி அமைந்திருக்கும் இடத்திற்கு மேல் உள்ள பாறை ஒன்றில் நின்ற இளைஞரை கண்ட தோட்டத் தொழிலாளர் ஒருவர் அது குறித்து ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து சில வழிகள் ஊடாக இளைஞனை நெருங்கிய பொலிஸார் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த குறித்த இளைஞனை காப்பாற்றியுள்ளனர்.

மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த இளைஞன் ஹட்டன் ரோதெஸ் தோட்டத்தை சேர்ந்தவர் எனவும் பெற்றோருடன் ஏற்பட்ட சண்டையால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி அந்த இடத்திற்கு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் மனநல மருத்துவரிடம் பரிசோதனை செய்த பின் மீண்டும் அவரை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.