களுத்துறை சிறையில் தற்கொலை செய்து கொண்ட கைதி

Report Print Steephen Steephen in சமூகம்

களுத்துறை சிறைச்சாலையின் கழிவறைக்குள் கழுத்தில் சுருக்கிட்டு இன்று அதிகாலை கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொறட்டுவை - லுனாவை பிரதேசத்தை சேர்ந்த சுரல் லக்சித என்ற நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவருகிறது.

இந்த நிலையில் மரண தொடர்பான பிரேதப் பரிசோதனைகள் நாகொட வைத்தியசாலையில் நடைபெறவுள்ளன.

களுத்துறை வடக்கு பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை ஹெரோயின் போதைப்பொருளுக்கு மிக மோசமாக அடிமையாகி இருந்த இந்த சந்தேகநபர் நேற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.