கிளிநொச்சிக்கு விஜயம் செய்து விவசாய உற்பத்திகளை பார்வையிட்ட அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

Report Print Suman Suman in சமூகம்

விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் திராட்சை உள்ளிட்ட விவசாய ஆராய்ச்சிகளை பார்வையிட்ட குறித்த குழுவினர் அங்கு காளான் வளர்ப்பு ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தினையும் திறந்து வைத்துள்ளனர்.

இதன்போது அங்கு புதிதாக ஆராய்ச்சி செய்யப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் தானிய உற்பத்திகளும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

மேலும் அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பரந்தனில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தில் விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை நேற்றையதினம் சந்தித்துள்ளனர்.

இதன்போது விவசாயிகள் மற்றம் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கேட்டறிந்துள்ளனர்.

இதன்போது அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கருத்து தெரிவிக்கையில், விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களிற்கு மானியங்கள் தேசிய வேலைத்திட்டன் ஊடாக வழங்கப்படவுள்ளது. அதனடிப்படையில் விவசாயத்திற்கு தேவையான பசளை மானியமாக வழங்கப்படவுள்ளது.

அதேவேளை மரக்கறி, மஞ்சள், கிழங்குக்கு போன்றவற்றுக்கு விதைகளும் மானயமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. குறித்த உற்பத்தி பொருட்களுக்கான சந்தைவாய்ப்புக்களையு்ம, ஏற்றுமதிகளையும் முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

விவசாயத்திற்கான நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தூவல் நீர்பாசன முறையை நடைமுறைப்படுத்தும் வகையில் அதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளோம்.

அதேவேளை இறக்குமதி பொருட்களை முழுமையாக நிறுத்தவும், உள்ளூர் உற்பத்திக்கான சந்தை வாய்ப்பினை அதிகரிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளோம்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான பசளை களஞ்சியம் ஒன்றை அமைத்து அதன் ஊடாக மானியமாகவும், குறைந்த விலையிலும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் அரசகேசரி தலைமையில்இடம்பெற்ற இச் சந்திப்புக்களில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, பண்டைய மேம்பாடு மற்றும் முட்டை சார்ந்த தொழில் அமைச்சர் டி.பி கேரத், நெல் மற்றும் தானியவகைகள் சேதன உணவுகள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, நாடாளுமன்ற பிரதிக் குழுக்களின் தலைவரும் யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், திணைக்களங்கள் சார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.