மேல் மாகாணத்தில் வேலையற்றவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

Report Print Vethu Vethu in சமூகம்

மேல் மாகாணத்தில் தொழிற்சாலை ஆரம்பிப்பதற்காக 150 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன் வந்துள்ளதாக தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முதலீடுகளின் பெறுமதி 28,350 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய மேல் மாகாணத்தில் 11 ஆயிரம் வேலை வாய்ப்புகள் ஏற்படவுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்காக காணி பெறுவதற்கு அத்தனகல்ல தொழில் நகரத்தை விரிவுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தனகல்ல மற்றும் வரக்காபொல பிரதேச செயலகங்கள் இரண்டிற்கு சொந்தமான தோட்டத்தில் 134 ஏக்கர் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.