தீப்பிடித்த கப்பல் தொடர்பாக சட்டமா அதிபர் புலனாய்வுத்துறையினருக்கு விடுத்துள்ள உத்தரவு

Report Print Ajith Ajith in சமூகம்

எம்டி நியூ டயமன்ட் கப்பலின் தீப்பரவலால் சுற்றாடலுக்கு ஏற்பட்ட தீமைகள் தொடர்பாக உரிய அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து குறித்த கப்பலின் தலைவரை நீதிமன்றத்தில் முன்னிலையாக்கும் அறிவித்தலை பெறுமாறு சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத்துறையின் பணிப்பாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசு தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்ததற்காக எம்டி நியூ டயமன்ட் கப்பலின் தலைவரை சந்தேக நபராக பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப்புலனாய்வுத்துறையின் பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேள எம்டி நியூ டயமண்ட் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை சட்டமா அதிபர் மதிப்பாய்வு செய்துள்ளதாக அவரின் இணைப்பாளர் நிஷாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசு தடுப்புச் சட்டத்தின் கீழ் எண்ணெய் கப்பலின் தலைவர் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்துள்ளார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் கருதுகிறார் என்றும் நிஷாரா ஜெயரத்ன குறிப்பிட்டுள்ளார்.