திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுத்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Report Print Mubarak in சமூகம்

அரசாங்கம் உறுதி வழங்கியது போன்று தமக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருமாறு கோரி திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இக்கவனயீர்ப்பு ஆரப்பாட்டம் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

அரசாங்கம் நாட்டிலுள்ள ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ள நிலையில் புறகணிக்கப்பட்ட மேலும் பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இணைத்துக்கொள்வதாக கூறியும் இதுவரை தமக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லையெனவும் துரித கதியில் வேலைவாய்ப்பினை வழங்குமாறு கோரியே திருகோணமலை மாவட்ட பட்டதாரிகள் கவன யீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டிருந்ததோடு, அரசாங்கம் பட்டதாரிகளை ஏமாற்றாதே, தொழில் வாய்ப்பினை விரைவுபடுத்து, ஈபிஎப், ஈடிஎப் எவ்வாறு அரசாங்கத்திற்கு சுமையாக மாறியது, அநீதிக்கு எதிராக போராடுவோம் போன்ற வாசகங்களை ஏந்தி கோஷமெழுப்பியுள்ளனர்.