உரிய ஆவணங்கள் இன்றி அரச காணிகளை அபிவிருத்தி செய்பவர்களுக்கு ஆவணங்களை வழங்க நடவடிக்கை

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணத்தில் முறையான ஆவணங்கள் இன்றி அரச காணிகளை அபிவிருத்தி செய்பவர்களுக்கு முறையான ஆவணங்களை வழங்கும் நோக்கில் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் கொள்கையின்படி, உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்தவும், பால் உற்பத்திகளை மேம்படுத்தவும், அரச காணிகளை சட்ட ரீதியற்ற வகையில் தற்போது வைத்திருப்பவர்களுக்கு முறையான ஆவணங்களை வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

சட்டரீதியற்ற முறையில் அரச காணிகளில் உள்ளவர்களின் விபரங்களைப் பெற்று, கிராம சேவையாளர் ஊடாக பிரதேச செயலாளரினால் முன்னெடுக்கப்படுகின்றன.

இது தொடர்பான கருத்தரங்குகளும், நிகழ்வுகளும், வடமாகாணத்தைப் பொறுத்தவரையில், கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் அரச காணிகளை முறையான ஆவணங்கள் இன்றி வைத்திருப்பவர்கள், இந்த திட்டத்தின் ஊடாக, விண்ணப்பங்களை சமர்ப்பித்து, அதற்குரிய விண்ணப்பங்களை கிராம அலுவர் மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக விண்ணப்பித்து, அந்தக் காணிகளுக்குரிய உரித்துக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், நிபந்தனைகள் உள்ளன. அந்த நிபந்தனைகளின் பிரகாரம், காணிகளுக்கான சட்டரீதியான ஆவணங்கள் வழங்கப்படும்.

அத்துடன், இவ்வாறான காணிகளைப் பயன்படுத்துபவர்கள், சட்டரீதியான ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவ்வாறு செயற்படாதவர்களுக்கு எதிராக கடுமையான நிபந்தனைகள் பின்பற்றபடும் என்று கூறியுள்ளார்.