போதைப்பொருள் சம்பந்தப்பட்ட விருந்து - ஐந்து பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கைது

Report Print Murali Murali in சமூகம்

கெஸ்பேவாவின் கலால் பிரிவினர் தம்பே பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் சம்பந்தப்பட்ட விருந்து ஒன்றின் போது சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது ஐந்து பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 15 கிராமுக்கு மேற்பட்ட ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கேரள கஞ்சா வைத்திருந்ததற்காக நெலுவ பகுதியில் போலி துறவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை விசாரித்ததில் மேலும் 02 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, 75 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன், காப்பீட்டு நிறுவன முகவராக காட்டிக்கொண்ட ஒருவரை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.