MT New Diamond கப்பல் உரிமையாளர்களிடம் பெரும் தொகை நட்டஈடு கோரியது இலங்கை!

Report Print Murali Murali in சமூகம்

கிழக்கு கடற்பரப்பில் தீ பிடித்த MT New Diamond கப்பல் உரிமையாளர்களிடம் 340 மில்லியன் ரூபா நட்டஈடு கோரிக்கை ஒன்றை சட்டமா அதிபர் சமர்ப்பித்துள்ளார்.

கப்பலில் ஏற்பட்ட தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும், அதற்கு வழங்கிய ஒத்துழைப்புகளை சுட்டிக்காட்டியே சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி கப்பலின் உரிமையாளர்களின் சட்டத்தரணிகளிடம் சமர்ப்பித்துள்ளார்.

இதேவேளை இழப்பீட்டுத் தொகையை முழுமையாக செலுத்தும் வரை கப்பலை இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேற்றுவதற்கும் சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.

இதேவேளை, கடந்த 3ம் திகதி அம்பாறை சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் MT New Diamond கப்பல் தீ விபத்திற்கு உள்ளானது.

2 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெயுடன் குறித்த கப்பல் இருந்த நிலையில், தீவிபத்திற்கு உள்ளானது. இதன்போது கப்பலில் இருந்த பணியாளர் ஒருவரும் உயிரிழந்தார்.

ஏனைய, 22 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்நிலையில், இலங்கை மற்றும் இந்திய கடற்படையின் உதவியுடன் குறித்த கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுக்குள்கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.