அறநெறி ஆசிரியர்களிற்கான ஊதியம் வழங்குவதற்கு ஈபிடிபி நடவடிக்கை

Report Print Thileepan Thileepan in சமூகம்

வன்னி மாவட்டத்தில் சேவை அடிப்படையில் பணி புரிந்து வரும் அறநெறி ஆசிரியர்களிற்கான கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கு ஈபிடிபி யின் இளைஞரணி தலைவரும் பிரதேச சபை உறுப்பினருமான இராசையா விக்டர்ராஜ் மேற்கொண்ட முயற்சியின் ஊடாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் அவர்களுக்கும் அறநெறி ஆசிரியர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது அறநெறி ஆசிரியர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

இதற்கான மேலதிக நடவடிக்கையாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்று அமைச்சரவையில் சமர்ப்பித்து இவர்களுக்கான ஊதியம் வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவி மூலம் வட மாகாண அறநெறி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் போது கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழ்த்திரு மாதவன் அவர்களும் கலந்து கொண்டார்.