மட்டக்களப்பு - புதூர் பிரதேசத்திலுள்ள மீனவர் சங்க கட்டட பகுதியில் கைவிடப்பட உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் பேதே குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மட்டக்களப்பு மாவட்ட தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.