வெளிநாட்டு லொத்தர் சீட்டிழுப்பில் இலங்கையர்களுக்கு பெருந்தொகை பணம்! சிக்கிய மோசடியாளர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்
1695Shares

வெளிநாடுகளில் லொத்தர் சீட்டிழுப்பில் இலங்கையர்களுக்கு பெறுமதியான பரிசு கிடைத்துள்ளதாக கூறி இணையம் ஊடாக பணம் மோசடி செய்த 14 வெளிநாட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக மற்றும் தகவல் பிரிவிற்கு பொறுப்பாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இவர்களினால் 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக 101 முறைப்பாடுகள் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான மோசடியாளர்களிடம் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.