முகமாலை பகுதியில் மனித எலும்புத்துண்டுகள் மீட்பு

Report Print Suman Suman in சமூகம்
76Shares

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் நிலத்திலிருந்து மனித எலும்பு துண்டுகள்,பற்றிகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

முகமாலைப்பகுதியில் நேற்றையதினம் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வரும் ஊழியர்களால் இவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இராணுவ சீருடை, மனித கால் எலும்புத்துண்டு, வாகன பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பளை பொலிஸார் குறித்த பொருட்களை மீட்டுள்ளதுடன், அவை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.