வடிகாணிலிருந்து அடையாள அட்டைகள், பணப்பைகள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் மீட்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன் நகர பிரதான வீதியின் நீர் வடிகாணிலிருந்து அடையாள அட்டைகள், ஏ.டி.எம். அட்டைகள் மற்றும் பணப்பைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

நகரசபை ஊழியர்கள் இன்றைய தினம் வடிகாண் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த போது இவை மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நீர் வடிகாணில் மலக்கழிவுகள் கால்வாய் இணைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நகரபையால் நகரின் பிராதன வீதியில் நீர் வடிகாண் துப்பரவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட் போதே 6 அடையாள அட்டைகள், 5 பணப்பைகள், 2 ஏ.டி.எம். அட்டைகள் என்பன ஊழியர்களினால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட பணப்பையில் பணம் எதுவும் இருக்கவில்லை என தெரிவித்த பொலிஸார், தீபாவளி காலங்களில் நகருக்கு வரும் பொது மக்களிடமிருந்து களவாடப்பட்டவையாக இவை இருக்காலம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் இவ்வாறு அடையாள அட்டைகள் மீட்கப்பட்டு அவை சம்பந்தப்படவர்களிடம் ஒப்பப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையில் இன்று மீட்கப்பட்ட அடையாள அட்டைகளின் உரிமையாளர்களை வரவழைத்து விசாரணையின் பின்னர் அவர்களிடம் அவற்றை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.