உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை பற்றி கத்தோலிக்க திருச்சபை அறிந்திருக்க வாய்ப்புண்டு! ஹரின் பெர்னாண்டோ

Report Print Ajith Ajith in சமூகம்

ஏப்ரல் 21, 2019, உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து, அனுப்பப்பட்ட முன் எச்சரிக்கை பற்றி கத்தோலிக்க திருச்சபை அறிந்திருக்க வாய்ப்புள்ளது என்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று இந்த சாட்சியத்தை வழங்கியுள்ளார்.

சட்டமா அதிபரின் பிரதிநிதி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

பாரம்பரியமாக பேராயர் ஒரு முக்கிய உயிர்த்த ஞாயிறு ஆராதனையை நடத்துகிறார்.எனினும் ஏப்ரல் 21, 2019 அன்று அவர் அத்தகைய ஆராதனையும் நடத்தப்படவில்லை.

இந்தநிலையில் 2019 ஏப்ரல் 20ஆம் திகதியன்று ஆராதனை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக சாட்சியம் வழங்கியுள்ளார்.

தாக்குதல்கள் தொடர்பான ஏனைய விஷயங்களை விசாரிக்கும் போது இந்த விடயம் தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும் என்று ஹரின் பெர்ணான்டோ ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.