ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் திடீர் சோதனை

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் நகரிலுள்ள ஹோட்டல்களும், பேக்கரிகளும் இன்று சுகாதார பரிசோதன அதிகாரிகளால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

டிக்கோயா நகரசபை தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க அம்பகமுவ சுகாதார பிரிவின் பொது சுகாதார மருத்துவ அதிகாரிகளின் வழிகாட்டலுக்கமைய பொது சுகாதார பரிசோதனை அதிகாரிகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா, உணவுகள் சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகின்றனவா, பழுதடைந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்று பரிசோதிக்கப்பட்டுள்ளன.

சில ஹோட்டல்களும், பேக்கரிகளும் உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்பதால் அதன் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் சில கடைகளின் உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்துவரும் நாட்களில் ஏனைய வர்த்தக நிலையங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.