இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பன்னிரண்டு வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரை இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று உத்தரவிட்டுள்ளார்.

கப்பல்துறை,திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது மனைவியின் தங்கையான பன்னிரண்டு வயதுடைய சிறுமியொருவரை பல தடவைகள் மனைவி இல்லாத சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் உறவினர் ஒருவரினால் சந்தேகநபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.