நல்லூர் பிரதேச சபைச் செயலாளர் மீது தாக்குதல்

Report Print Dias Dias in சமூகம்

நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் மீது இன்று முற்பகல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் தாக்குதல் நடத்தியவருடன் இணக்கமாகச் செல்லுமாறு கோப்பாய் பொலிஸார், பிரதேச சபைச் செயலாளருக்கு அழுத்தம் வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

திருநெல்வேலி சந்தை தொகுதியில் உள்ள உறவினரின் கடை தொடர்பில் பிரதேசசபை செயலாளரால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக தெரிவித்து நல்லூர் அரசடியைச் சேர்ந்த ஒருவர் முரண்பட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த நபர் பிரதேச சபைச் செயலாளரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போதும், அவரை தடுத்து வைத்த பிரதேச சபை ஊழியர்கள் கோப்பாய் பொலிஸாரிடம் சந்தேகநபரை ஒப்படைத்துள்ளதாக தெரியவருகிறது.