குழந்தைகளிடம் ஏற்பட்ட பொறாமை காரணமாக ஒன்றரை மாத சிசுவை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்

Report Print Gokulan Gokulan in சமூகம்
275Shares

மட்டக்களப்பில் வீட்டுக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாயார் சந்தேகத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை இன்று கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி இரவு மட்டக்களப்பு வன்னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து சடலமாக 42 நாள் கொண்ட கோஷனி என்ற சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரiணைகளை மட்டு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பி.கே.ஹாட்டியாராச்சியின் ஆலோசனைக்கமைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு சப் இன்பெஸ்டர் எம்.ஜீ.பி.எம். முகமட் ஜிசூ தலைமையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ரி.கிருபாகரன் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த குழந்தையின் தாயாரிடம் மேற்கொண்ட விசாரணையில், எனது மூத்த பிள்ளைக்கு இரண்டரை வயது என்றாலும் அவர் தொடர்ந்தும் தாய்ப்பால் குடித்து வருகிறார்.அந்த நிலையில் இரண்டாவது பிள்ளை கருவுற்று பிறந்த பின் அவருக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போயுள்ளதனால் பிறந்த பிள்ளைக்கு தாய்ப்பால் வழங்கும்போது மூத்தபிள்ளை என்னை முறைத்து பார்ப்பதுடன், சிறிய குழந்தை மீது பொறாமை கொண்டு தந்தையிடம் அம்மா தன்னை கவனிப்பதில்லை என தெரிவித்து வந்துள்ளார் .

மூத்த பிள்ளை என்னிடம் வருவது குறைவடைந்துள்ளது இதனால் நான் குழப்பமடைந்திருந்தேன். இந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி சம்பவதினமான மாலை வீட்டில் எனது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் கோவிலுக்கு சென்ற சமயம் நான் தனிமையில் இருந்தபோது கட்டிலில் படுத்திருந்த குழந்தையின் வாயில் துணியை திணித்து பின் வீட்டின் முன்பகுதியில் இருந்த குழந்தையை கிணற்றில் வீசினேன்.

பின்னர் குழந்தையை காணாமல் போயுள்ளதாக தெரிவித்தேன் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த தாயாரை கைது செய்ததுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.