கொழும்பிலுள்ள தாமரை கோபுரத்தில் இன்று ஏற்பட்ட மாற்றம்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பிலுள்ள தாமரை கோபுரம் இன்று மாலை 6 மணி முதல் செம்மஞ்சள் நிறத்தில் ஒளிர விடப்பட்டது.

சர்வதேச நோயாளி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இவ்வாறு தாமரை கோபுரம் செம்மஞ்சள் நிறத்தில் ஒளிர விடப்பட்டது.

சுகாதார அமைச்சு உட்பட நாட்டினை அனைத்து வைத்தியசாலைகளையும் செம்மஞ்சள் நிறத்தில் அலங்கரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் முதல் உலக சுகாதார அமைப்பினால் இன்றைய தினத்தை நோயாளி பாதுகாப்புக்கான சர்வதேச தினமாக அறிமுகம் செய்யப்பட்டது.

அதற்கமைய இலங்கை உட்பட உலக நாடுகளிலுள்ள வைத்தியசாலைகளில் இன்றைய தின கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.