மூலிகையினால் தன்னிறைவு திட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் முன்னெடுப்பு

Report Print Mubarak in சமூகம்

மூலிகையினால் தன்னிறைவு" என்ற ஜனாதிபதியின் செயற்திட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் முன்னெடுக்ப்பட்டுள்ளது.

இந் நிகழ்வு யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

"மூலிகையினால் தன்னிறைவு" என்ற நாட்டின் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு இணங்க இன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மூலிகை மரங்கள் நாட்டும் வேலைத்திட்டம் சுதேச மருத்துவ திணைக்களத்தினரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைவாக இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலும் மூலிகை மரம் நாட்டப்பட்டுள்ளது.

மூலிகையினால் தன்னிறைவு என்ற செயற்திட்டத்தின் அடிப்படையில் இன்றைய தினம் இந்த மர நடுகை செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணம் முழுவதும் சமூக மருத்துவ உத்தியோகத்தர்களினால் ஒவ்வொரு திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகள் வாயிலாக மூலிகை மரங்கள் நடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மூலிகையினால் உடலில் ஏற்படுகின்ற வியாதிகளை சிறிதளவேனும் கட்டுப்படுத்தி எமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதன் மூலம் கூடுதலான வியாதிகளை நாங்கள் எமது வீட்டில் இருந்தபடியே குணப்படுத்திக்கொள்ள முடியும்.

எனவே இவ்வாறான மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து மூலிகை அருந்துவதன் மூலம் நோய்களை தடுக்கலாம்.

ஜனாதிபதியினால் மூலிகை வாரமாக அறிவிக்கப்பட்டதற்கு இணங்க இந்த செயற்திட்டம் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படுகிறது.எனினும் இது தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும்.

மேலும் மூலிகை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது பிரதான நோக்கம் என ஆயுள்வேத திணைக்கள ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் மருத்துவ திணைக்கள வைத்தியர்கள் , உத்தியோகத்தர்கள், யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.