ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஹரின் பெர்னாண்டோவிற்கு எச்சரிக்கை!

Report Print Ajith Ajith in சமூகம்
107Shares

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஆணைக்குழுவில் தனது சாட்சியத்தின் போது நடந்துக்கொண்ட விதம் குறித்து எச்சரித்துள்ளார்.

ஹரின் பெர்ணான்டோவின் இந்த நடவடிக்கை ஆணைக்குழுவை அவமதிக்கும் செயலாகும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தனது தந்தை முன்னதாகவே எச்சரித்ததாக தாம் ஊடகங்களுக்கு தெரிவித்த கூற்று தொடர்பில் சாட்சியமளிக்க ஹரின் பெர்ணானாடோ நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் குற்றவியல் புலனாய்வுத் துறையின் அதிகாரி ஒருவர் தனது தந்தைக்கு தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கை செய்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக சாட்சி ஹரின் பெர்னாண்டோ கூறினார்.

இதன்போது தகவல் அளித்த சட்டத்தரணி ஒருவர் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு முதல்நாள் குற்றப்புலனாய்வுத்துறையில் பணியாற்றும் நந்தலால் என்ற அலுவலருடன் சுமார் 356 வினாடிகள் நீண்ட தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டிருந்தார் என்பது தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார்.

சஹ்ரான் ஹாஷிமின் குழு உறுப்பினர் ‘ஆர்மி மொஹிதீனை’ கைது செய்வதற்கும், வண்ணாத்துவில்லுவில் வெடிபொருட்களை மீட்பதற்கும் பாசிக்குடாவுக்கு விஜயம் செய்த காவல்துறைக் குழுவில் அங்கம் வகித்த நந்தலால் என்ற அலுவலரே அவர் என்று சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் தொடர்ந்து சாட்சியம் அளித்த ஹரின் பெர்ணான்டோ, தமது தந்தையிடம் இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே எவ்வாறு தெரியவந்தது என்று தாம் கேட்டபோது “உன்னை விட அதிகம் எனக்கு தெரியும்” என்று அவர் பதிலளித்ததாக ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பில் உள்ள ஒரு கத்தோலிக்க தனியார் கல்லூரியில் தற்போது படித்து வரும் ஹரினின் மருமகன் குறித்து அரச சட்டத்தரணி ஒருவர் பெர்னாண்டோவிடம் விசாரணை செய்தார்.

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் அன்று குறித்த மாணவன் கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்துக்கு செல்ல திட்டமிட்டிருந்தபோதும் அங்கு செல்லாமை குறித்து அவர் ஹரின் பெர்ணான்டோவிடம் கேள்வி எழுப்பினார்

இதன்போது சாட்சியான ஹரின்; பெர்ணான்டோ, சட்டத்தரணியுடன் முரண்படும் வகையில் செயற்பட்டார்.

இந்தநிலையில் அவரை எச்சரித்த ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணியுடன் முரண்படுவது ஆணைக்குழுவை அவமதிக்கும் செயல் என்று தெரிவித்தார்