சிறுவன் ஒருவனுக்கு ஏற்பட்ட நிலை! கொழும்பை சேர்ந்த ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

Report Print Ajith Ajith in சமூகம்

2013 ஆம் ஆண்டில் 10 அகவைச் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்து 2020 ஆகஸ்டில் குற்றவாளி எனக் கருதப்பட்ட கொழும்பில் வசிக்கும் 41 அகவையைக்கொண்ட ஒருவருக்கே கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

முறைப்பாட்டை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவரை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபையின் சிறப்பு காவல் பிரிவு கைது செய்தது.

இதேவேளை சிறைத் தண்டனையைத் தவிர 10,000 ரூபாவை அபராதமாக செலுத்துமாறு உத்தரவிட்ட நீதிமன்றம் அதனை செலுத்தத் தவறினால் எட்டு மாதங்கள் வரை சிறைத்தண்டனையை நீடிக்கும் உத்தரவையும் பிறப்பித்தது.