சி.ஐ.டியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Report Print Rakesh in சமூகம்

சாட்சியங்களை மறைத்த மற்றும் மாற்றியமைத்த குற்றச்சாட்டில் கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்களை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்கள் இன்று கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இவ்விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்தார் என்று பல நபர்களைப் பயன்படுத்தி சாட்சிகளை உருவாக்கியமை தொடர்பில் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.