தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வவுனியா நகரசபை உறுப்பினர் முற்பட்ட நிலையில் சட்டத்தினை காரணம் காட்டி தவிசாளர் அதனை மறுத்துள்ளார்.
வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் கௌதமன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது கூட்டமைப்பின் பெண் நகரசபை உறுப்பினர் லக்சனா நாகராஜன் தியாகி திலீபனுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துவதற்கு சபையின் தவிசாளரிடம் அனுமதி கேட்டிருந்தார்.
எனினும் குறித்த நிகழ்வினை அனுஸ்டிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளமையால் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, தவிசாளர் குறித்த உறுப்பினரிடம் தெரிவித்தார்.