யாழில் பாம்பு தீண்டியதில் 7 வயது சிறுவன் பரிதாபமாக பலி!

Report Print Ajith Ajith in சமூகம்

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை தெற்கு பகுதியில் பாம்பு தீண்டியதில் ஏழு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்ஃ

செல்வம் ஜெசிந்தன் என்ற 2ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சிறுவன் நேற்று மாலை 6.30 மணியளவில் மலசல கூடத்துக்குச் சென்றுள்ளான்.

அங்கு பாம்பு தீண்டியுள்ளது. அதனை தாயாரிடம் வந்து சிறுவன் கூறியுள்ளான். எனினும் பாம்பு இல்லை பூச்சி எதுவோ கடித்துள்ளது என்று தாயார் பெரிதுபடுத்தாமல் விட்டுள்ளார்.

இந்த நிலையில் ஒன்றரை மணி நேரத்தின் பின் சிறுவன் மூச்சு விடுவதில் அவதிப்பட்டுள்ளான். அதன் பின்னரே சிறுவனை தாயார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

எனினும் உடலில் விஷம் ஏறியதால் சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இறப்பு விசாரணையை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் முன்னெடுத்தார். சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.