இலங்கையில் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் சிறைக்கைதிகள்..

Report Print Ajith Ajith in சமூகம்

போதைவஸ்து பயன்பாடு குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் தமது உயிர்களை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்று வருகின்றன.

இறுதியாக இன்றும் களுத்துறை சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் தமக்கு போதைவஸ்து கிடைக்காமை காரணமாக விரக்தியுற்று உயிரைப்போக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறைச்சாலைகளுக்குள் இதுவரை போதைப்பொருள் இன்மை காரணமாக ஆறு கைதிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை அதிகாரிகள் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த உயிரிழப்புக்களும் பதிவாகி வருகின்றன.

இதேவேளை நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கடந்த ஜனவரி முதல் பல்வேறு காரணங்களுக்காக 11 கைதிகள் தமது உயிர்களை போக்கிக்கொண்டனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.