கொழும்பு துறைமுக நகரத்தை நிர்மாணிப்பதன் மூலம் முதன் முறையாக கடலின் ஒரு பகுதி நாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் 6வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒரு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டபோது பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
"இந்த திட்டத்தை சீன ஜனாதிபதியும் நானும் தொடங்கி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. சில அண்மைய நிகழ்வுகள் காரணமாக திட்டத்தின் பணிகள் சுமார் இரண்டு ஆண்டுகள் தாமதமாகின.
துறைமுக நகர திட்டத்தின் பணிகள் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுக திட்டம் எதிர்காலத்தில் இலங்கையின் முக்கிய வருமான ஆதாரமாக மாறும்,
"இது சுமார் 83,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்த திட்டத்திற்கான மொத்த முதலீடு 15 பில்லியன்களாகும். நாங்கள் சிறியவர்களாக இருந்தபோது இந்த நாடு கடலால் அரிக்கப்படுவதாகக் கேள்விப்பட்டோம்.
எனினும், முதல் முறையாக, நாங்கள் எங்கள் நாட்டில் கடலை இணைத்துள்ளோம்” என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.