சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இருப்பது பாரதூரமானது! இராணுவத் தளபதி எச்சரிக்கை

Report Print Murali Murali in சமூகம்
23Shares

கொரோனா தொற்று சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொது மக்கள் நடந்து கொள்வது பாரதூரமானது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்படுத்தல் தேசிய செயற்பாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டில் சமூகத்தினுள் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படாவிட்டாலும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பெரும்பாலானவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளமை இனங்காணப்படுகிறது.

எனினும் சமூகத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்படாவிட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொது மக்கள் இந்த நிலைவரத்தை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.