இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்கள் நாட்டுக்கு அனுப்பி வைப்பு..

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையில் தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இன்று சிறப்பு விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

கொழும்பில் இருந்து பெங்களூரு மற்றும் புதுடெல்லிக்கு சிறப்பு ஏர் இந்தியா விமானத்தில் ஒரு குழந்தை உட்பட 154 இந்திய நாட்டினர் இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கொரோனாவினால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியப் பொதுமக்களை திருப்பி அழைப்பதற்காக உலகெங்கிலும் இருந்து இந்தியாவுக்கு அழைத்துக்கொள்வதற்கான இந்திய அரசாங்கத்தின் 'வந்தே பாரத் மிஷன்' ஒரு பகுதியாக இந்த விமானம் இன்று இந்தியர்களை இலங்கையில் இருந்து அழைத்துச் சென்றது.

வந்தே பாரத் மிஷனின் பல்வேறு முறைகள் மூலம் இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்தியாவுக்கு திரும்புவதற்காக இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இதுவரை பதிவு செய்யாத இலங்கையில் உள்ள இந்தியர்கள் இந்திய உயர்ஸ்தானிகரத்தின் இணையத்தின் ஊடாக பதிவுகளை செய்துக்கொள்ளமுடியும் என்றும் உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.