கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் தாக்குதலுக்குள்ளான நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிரதேச சபைக்குட்பட்ட காணி விவகாரம் தொடர்பில் நேரில் விசாரிப்பதற்காகச் சென்றபோதே அவர் தாக்குதலுக்குள்ளானார் என்று நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.