யாழ். பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் விடுத்துள்ள அறிவிப்பு

Report Print Murali Murali in சமூகம்
252Shares

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இணைய வழியாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பகிடிவதை குறித்து உடனடி விசாரணை நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார்,

இந்நிலையில், குற்றவாளிகள் எனக் கருதப்படுபவர்களுக்கு பகிடிவதை சட்டத்தின் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரைத் தொடர்பு கொண்டு, இந்த விவகாரம் குறித்து விரிவாக கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார்.

எனினும், அவ்வாறான பகிடிவதை சம்பவங்கள் தொடர்பாக தனக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என துணைவேந்தர் தன்னிடம் நம்பிக்கை தெரிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக, இந்த சம்பவங்களின் வெளிப்பாடு மிகவும் சாத்தியமானதாகிவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்னால் இருக்கும் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்ட பின்னர், சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக அவர்களின் கையடக்கபேசிகள் நீதிமன்றத்தால் பரிசோதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.