பாடசாலைக்குள் புகுந்த 10 அடி நீளமான மலைப்பாம்பு

Report Print Vethu Vethu in சமூகம்

பதுளை, லுனுகல பிரதேசத்தில் ஜனதாபுர மகா வித்தியாலயத்திற்குள் நுழைந்த மிகப்பெரிய மலைப் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாம்பினை வனவிலங்கு திணைக்களத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக லுனுகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத்தில் பாடசாலைக்குள் புகுந்த பாம்பை பார்ப்பதற்கு கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர்.

இந்த பாம்பு 10 அடி நீளமும் 25 கிலோ கிராம் நிறையும் கொண்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மலைப்பாம்பு பிரதேசத்திலுள்ள நாய்கள், பூனைகள், கோழிகள் உட்பட விலங்குகளை உணவிற்கு எடுப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.