வெடிப்பொருட்கள் மற்றும் சையனைட் குப்பியுடன் முன்னாள் இராணுவ அதிகாரி கைது

Report Print Steephen Steephen in சமூகம்
135Shares

துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கைது ஒருவர் செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பிராந்திய விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸார் இந்த நபரை கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அளுத்கமை பாதாகொட பிரதேசத்தில் நேற்று சந்தேகநபர் இந்த பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, 9 மில்லி மீற்றர் தோட்டாக்கள் 7, ரி 56 ரது துப்பாக்கிக்கான 5 தோட்டாக்கள், குழல் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 5 தோட்டாக்கள், குண்டு துளைக்காத அங்கி, வாயு முக கவசம், சையனைட் குப்பி, 3.23 கிராம் ஹெரோயின், இராணுவ சீருடைகள் என்பவை சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

43 வயதான பேருவளை பாதாகொட பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர், இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

அளுத்கமை பொலிஸார் சந்தேகநபர் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.