இணையம் வழியாக பறவைகளை விற்பனை செய்த ஒருவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்
94Shares

இணையத்தளம் வழியாக பறவைகளை விற்பனை செய்து வந்த ஒருவரை வனஜீவராசிகள் திணைக்களத்தின் அவசர தேடுதல் பிரிவின் அதிகாரிகள், மாத்தளையில் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 6 கிளிகள், 6 கிளி குஞ்சுகள், மைனா, 3 மைனா குஞ்சுகள், 6 சிறிய இன கிளிகளையும் தாம் கைப்பற்றியதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு விலங்கியல் ஆர்வலர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் இன்று மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.