எம்.சீ.சீ உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்பதற்காகவே கணக்காய்வு ஆணைக்குழுவை இரத்துச் செய்ய முயற்சி

Report Print Steephen Steephen in சமூகம்
58Shares

அமெரிக்கா முன்வைத்துள்ள எம்.சீ.சீ உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்பதன் காரணமாகவே அரச நிறுவனங்களை கணக்காய்வு செய்யக்கூடாது என்ற கடும் நிலைப்பாட்டில் அரசாங்கத்தில் உள்ள சிலர் இருப்பதாக சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

கொள்ளையிட இடமளிக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கத்தில் உள்ள சிலர் அரச நிறுவனங்களை கணக்காய்வு செய்வதை எதிர்க்கவில்லை.

எம்.சீ.சீ. உடன்படிக்கைக்கு அமைய எம்.சீ.சீ லங்கா என்ற பெயரில் ஏற்படுத்தப்பட உள்ள நிறுவனத்திற்கு இடமளிக்கவே அவர்கள் இந்த கடும் நிலைப்பாட்டில் உள்ளனர். இதனால், கணக்காய்வு ஆணைக்குழுவை இரத்துச் செய்ய முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிறுவனம் இலங்கையின் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் நிறுவனம் என்ற போதிலும் உத்தேச எம்.சீ.சீ உடன்படிக்கைக்கு அமைய அந்த நிறுவனம் தொடர்பான கணக்காய்வுகளை மேற்கொள்ள முடியாது.

இலங்கையில் உள்ள நிறுவனங்களின் வரவு செலவுகள் தொடர்பான கணக்காய்வுகளை செய்யும் சட்ட ஏற்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக மக்கள் நீதிமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் வசந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.