இங்கிலாந்து விலங்கினக்காட்சிசாலையில் வசித்து வந்த 'சரிஸ்கா' என்ற இலங்கையின் சிறுத்தை இறந்துவிட்டதாக தெரியவருகிறது.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் இரண்டு குட்டிகளை ஈன்ற நிலையிலேயே அது நேற்று முன்தினம் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 முதல் நோர்போக்கில் உள்ள பன்ஹாம் விலங்கினக்காட்சிசாலையில் வசித்து வந்த சரிஸ்கா, பல வாரங்களாக உடல்நிலை பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.
13 அகவையைக் கொண்ட இந்த சிறுத்தைக்கு பிரேத பரிசோதனையின் போது இதயத்தில் பலவீன நிலை இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதுவே அதன் மரணத்திற்கு வழிவகுத்திருக்கும் என்று விலங்கினக்காட்சிசாலை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.