இரகசிய தகவலின் அடிப்படையில் முச்சக்கரவண்டியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 497 டெட்டனேட்டருடன் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா அண்ணல் நகர் பகுதியைச் சேர்ந்த சுல்தான் முபாரக் (54 வயது) என தெரியவருகிறது.

தம்பலகாமம் பிரதேசத்திலிருந்து கிண்ணியா நோக்கி வெடிக்க வைக்கும் கருவிகளை கொண்டு செல்வதாக தம்பலகாமம் விசேட பொலிஸ் பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த டெடனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன்பின் அவரை கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.