வவுனியா - பன்றிகெய்தகுளத்தில் சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பன்றிகெய்தகுளத்தில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக துப்பாக்கி (இடியன்துவக்கு) ஒன்றினை மறைத்து வைத்திருப்பதாக ஓமந்தை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
குறித்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது உபபொலிஸ் பரிசோதகர் அருளானந்தம் தலைமையிலான குழுவினரால் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கியை தமது உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை ஓமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.